காயங்கள் காரணமாக உள்ள சுமைகளின் மேலோட்டம் (மூலங்கள்: வருடாந்த சுகாதார செய்தித்தாள், வருடாந்த கடுமையான தொற்றா நோய் அறிக்கை, 2017, தேசிய காய நுண்ணாய்வு, 2018, தொற்றா நோய் அலகு, சுகாதார அமைச்சு, உலக சுகாதார ஸ்தாபன உள்நாட்டு அறிக்கை, 2018)

நோயுற்ற நிலை

  • கடந்த 2 தசாப்தங்களுக்கு மேலாக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுவதற்கான 1வது காரணம் காயங்களாகும்.
  • காயங்கள் காரணமாக ஒவ்வொரு வருடமும் சுமார்; 1 மில்லியன் மக்கள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்படுகிறார்கள்.
  • ஒவ்வொரு நிமிடமும், குறைந்தபட்சம் 2 தனிநபர்கள் காயம் காரணமாக ஏதேனும் ஒரு அரசாங்க வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகிறார்கள்.
  • ஒவ்வொரு வருடமும் வைத்தியசாலைகளின் மொத்த அனுமதியில் 17 - 18மூ காயங்கள் காரணமாக எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
  • காயங்கள் காரணமாகப் பாதிக்கப்பட்ட சுமார் 2 - 3 மில்லியன் மக்களுக்கு அரசாங்க வைத்தியசாலைகள், தனியார் வைத்தியசாலைகள் மற்றும் சுதேச மருத்துவ துறைகள் என்பவற்றின் வெளி நோயாளர் பிரிவில் சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே, ஒவ்வொரு வருடமும், மொத்த சனத் தொகையில் குறைந்தபட்சம் 5 பேருக்கு 1 நபர் என்ற வகையில் மருத்துவ உதவி தேவைப்படுகின்ற காயத்துக்கு உள்ளாகியுள்ளனர்.
  • அதன் விளைவாக, தினசரி சுமார் 11000 தனிநபர்கள் காயங்களுக்காக சுகாதார கவனிப்பைப் பெறுகிறார்கள். அதவது ஒவ்வொர நிமிடமும் சுமார் 8 இலங்கையர்கள் மருத்துவ கவனிப்பைப் பெறுகிறார்கள்.
  • காயங்களுக்கு உள்ளான சிலர் சுகாதார வசதிகளை நாடாமல் வீட்டிலிருந்தே மருத்துவ பரிகாரம் செய்து கொள்ளுவதால், காயங்களுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை மதிப்பிடப்பட்ட எண்ணிக்கையை விட அதிகரிக்கலாம்.
  • மேலும், அனைத்து காயங்களையும் கவனத்தில் எடுத்துக் கொண்டால் காயங்களுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை பல மில்லியன்காளாக இருக்கலாம்.
  • அறிவிக்கப்பட்ட காயங்களில், பெரும்பாலும் கீழே விழுந்ததால் அனுமதிக்கப்பட்டுள்ளார்கள் (24%) அத்துடன் அறிவிக்கப்பட்ட அதிகமான காயங்கள் வீட்டில் நிகழ்ந்துள்ளன (40%). அதிகமானவர்கள் பயணம் செய்யும்போது பாதிக்கப்பட்டுள்ளார்கள் (24%).

இறப்பு வீதம்

  • வருடாந்தம் காயங்களால் இலங்கையில் 14000 பேர் உயிரிழக்கிறார்கள். அதன்படி, காயங்கள் குறைந்தபட்சம் 38 இலங்கையர்களைக் கொல்லுகிறது. (ஒவ்வொரு 2 மணித்தியாலத்திற்கு சமார் 3 தனிநபர்கள்).
  • இலங்கையில் மரணங்களுக்கு காயங்கள் 4வது காரணமாக இருக்கின்றது. (அனைத்து மரணங்களின் 10% ~ 14000) அத்துடன் வைத்தியசாலை மரணங்களில் 10வது காரணமாகும். (3.7% ~ 2000).
  • அதனால், பல்வேறு காரணங்களுக்காக வைத்தியசாலைகளில் அனுமதிப்பதற்கு முன்னர் 10000க்கு மேற்பட்ட தனிநபர்கள் மரணமடைகின்றனர்.

காயங்கள் சுமை

  • நகரமயமாதல், கைத்தொழில்மயமாதல், பொறிமுறைப்படுத்தல் மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி என்பவற்றின் காரணமாக மக்களுடைய வாழ்க்கைமுறையில் துரித மாற்றங்கள் ஏற்பட்டதன் விளைவாக பொருத்தமான தடுப்பு மூலோபாயங்கள் அமுல்படுத்தப்படாவிட்டால் அடுத்த தசாப்தத்தில் காயங்களின் சுமை அதிகரிக்கும் எனத் திட்டமிடப்பட்டுள்ளது.
  • காயங்களுக்குப் பலியானவர்களில் பெரும்பாலானவர்கள் உற்பத்தி வயதுக் குழுவில் இருக்கின்றவர்களாவர் (15 முதல் 44 வயது வரை). அத்துடன் அந்த வயது குழுவினருக்கு முதல் கொல்லியாக இது விளங்குகின்றது.
  • காயங்கள் பலியாகின்றவர்களுக்கு மாத்திரமல்ல அவர்களின் குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் நீண்டகால அழிவுக்கு காரணமாக அமைகிறது.
  • காயங்களுக்கு உள்ளாகின்ற நோயாளிகளைக் கவனிப்பதற்கு நாட்டின் வரவுசெலவு திட்டத்தில் பெருந்தொகை செலவிடப்படுகிறது.
  • காயங்கள் காரணமாகச் செய்கின்ற மறைமுக செலவுகள் மிக அதிகமாக இருப்பதோடு அது இன்னும் சரியாக அடையாளம் காணப்படவில்லை.

பெரும்பாலான காயங்கள் குறிப்பாக கருதா காயங்கள் எதிர்வுகூறக்கூடிய காயங்களாகவும் சரியான முன்னெச்சரிக்கையுடன் பாதுகாப்பு நடவடிக்கை எடுத்தால் தடுக்கக்கூடிய காயங்களாகவும் இருக்கின்றன. ஆனால் அறிவு குறைவு, பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காமை, சட்டத்தை இணங்கியொழுகாமை, கவனயீனம், முதலுதவி திறமை குறைவு, மோசமான போக்குவரத்து, மோசமான சூழல் நிலைகள், மோசமான நிலைகள் மற்றும் வாகனங்கள் மற்றும் இயந்திரங்கள் போன்ற உபகரணங்களை சரியானமுறையில் பராமரிக்காமை போன்ற பல காரணங்களால் அதை அடைவது மிகவும் கஷ்டமாகும்.