இலங்கையில் சுகாதார அமைச்சின் தொற்றா நோய் அலகு ஆரம்ப சுகாதார - கவனிப்பு நிறுவகங்களின் கீழ் மட்டம் ஊடாக தொற்றா நோய் (NCD) திரையிடல் (Screening) சேவைகளின் பற்றாக்குறையை அளவளாவுவதற்கு 2011ஆம் ஆண்டு ஆரோக்கியமான வாழ்க்கைமுறை நிலையங்களை (HLC) முன்னெடுத்தது. ஆரோக்கியமான வாழ்க்கைமுறை நிலையங்களின் (HLC) பிரதான நோக்கம் 35 வயதுக்கு மேற்பட்ட மக்களின் தொற்றா நோய் ஆபத்தைக் குறைப்பதற்கு ஆபத்தை முற்கூட்டியே கண்டறிந்து கடுமையான இதய நாளக்குழாய் நோய் ஆபத்துள்ள (CVD) மக்களுக்கு விசேட மருத்துவ சிகிச்சைகளைப் பெறுவதற்கான அணுகுமுறையை மேம்படுத்துவதாகும். உலக சுகாதார அமைப்பு / சர்வதேச உயர் இதய அழுத்த ஆபத்தை எதிர்வுகூறும் சங்கத்தின் வரைபடத்தைப் பயன்படுத்தி ஆரோக்கியமான வாழ்க்கைமுறை நிலையங்களில் (HLC) திரையிடப்பட்ட (Screening) சேவை பெறுநர்கள் முழுமையான ஆபத்து அணுகுமுறையை அடிப்படையாகக் கொண்டு 10 வருட இதய நோய் ஆபத்து மதிப்பீடு செய்யப்படுகிறது.