செயல் நோக்கு

தொற்றா நோய், மரணங்கள் மற்றும் உடல் ஊனம் ஆகிய சுமையற்ற தேசம்

செயற் பணி

தொற்றா (NCD) நோய்கள் காரணமாக நீடித்த நோயுற்ற நிலை, இறப்பு வீதம் மற்றும் உடல் ஊனம் ஆகிய தடுக்கக்கூடிய மற்றும் தவிர்க்கக்கூடிய சுமையைக் குறைப்பதற்குப் பங்களிப்புச் செய்தல் மற்றும் சனத்தொகை பெறக்கூடிய உயர் தரமான சுகாதாரம், நல்வாழ்வு மற்றும் உற்பத்தித் திறன் என்பவற்றை உறுதிப்படுத்துதல் மற்றும் தொற்றா நோய்கள் நாட்டின் சமூக பொருளாதார அபிவிருத்திக்குத் தடையாக இருக்காமை.

வரலாறு

நீடித்திருக்கும் தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்தும் மற்றும் தடுக்கும் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தை திட்டமிடுவதற்கு, அமுலாக்குவதற்கு, கண்காணிப்பதற்கு மற்றும் மதிப்பீடு செய்வதற்கு முதலில் சுகாதார அமச்சில் 1988ஆம் ஆண்டு தொற்றா நோய்களின் இயக்குநர் குழுமம் ஸ்தாபிக்கப்பட்டது. மாவட்டங்களில் தொற்றா நோய்கள் நிகழ்ச்சித்திட்டத்தை அமுலாக்குவதை இணைப்பாக்கம் செய்வதற்காக, மாவட்டத்தின் மையமாக, 2003ஆம் ஆண்டு தொற்றா நோய்கள் மருத்துவ உத்தியோகத்தர் பதவி உருவாக்கப்பட்டது. காயங்களைத் தடுக்கும் அலகு இயக்குநர் குழுமத்தில் 2009ஆம் ஆண்டு முறையாக உருவாக்கப்பட்டது. மேலும் காயங்களைத் தடுத்தல் என்ற விடயம் தொற்றா நோய்களைத் தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்தல் நிகழ்ச்சித்திட்டத்தில் கூட்டிணைக்கப்பட்டது.

நாட்டில் தொற்றா நோய்களைத் தடுத்தல் மற்றும் கட்டுப்படுத்தல் தேசிய நிகழ்ச்சித்திட்டத்தை மேலும் பலப்படுத்துவதற்கு 2017ஆம் ஆண்டு தொற்றா நோய் பணிப்பாளர் நாயகம் (DDG/NCD) நிமிக்கப்பட்டதோடு தொற்றா நோய் பணியகம் ஸ்தாபிக்கப்பட்டது.

கொள்கை வழிகாட்டிகள்

இலங்கையில் காயங்களைத் தடுத்தல் மற்றும் முகாமைப்படுத்தல் சட்டகத்திற்கான (2016) தேசிய கொள்கையும் மூலோபாயமும் 'தொற்றா (NCD) நோய்கள் காரணமாக நீடித்த நோயுற்ற நிலை, இறப்பு வீதம் மற்றும் உடல் ஊனம் அற்ற தேசம்' என்ற செயல் நோக்கை நோக்கி வழிகாட்டுகின்ற அதேவேளையில் தொற்றா நோய்களைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்குமான தேசிய கொள்கை மற்றும் மூலோபாய சட்டகம் (2010) காயங்களைத் தடுக்கும் நிகழ்ச்சித்திட்டத்திற்காக வழிகாட்டுகிறது. மேலும் தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கும் தடுப்பதற்கும் தேசிய பல்-துறை செயற் திட்டம் (2016-2020) நாட்டில் தொற்றா நோய்களைத் தடுப்பதற்காக பல்-துறை ஈடுபாட்டுடன் முன் செல்லுவதற்கு வழியமைக்கிறது.

தேசிய தொற்றா நோய்கள் நிகழ்ச்சித்திட்டத்தை அமுலாக்குவதை கண்காணிப்பதற்கு தேசிய, மாகாண மற்றும் பிராந்திய மட்டத்தில் இணைப்பாக்க பொறிமுறைகள் ஸ்தாபிக்கப்பட்டன. காயங்களைத் தடுப்பதற்காக தொற்றா நோய்கள் பேரவை மற்றும் தேசிய தொற்றா நோய்கள் செயற்குழு, தொற்றா நோய்களுக்கான தேசிய ஆலோசனை சபை மற்றும் தேசிய குழு என்பவற்றின் வழிகாட்டலின் கீழ் நீடித்த தொற்றா நோய்கள் மற்றும் காயங்களைத் தடுக்கும் கொள்கைகள் மற்றும் MSAP என்பவற்றை அமுலாக்குவதில் செயற்பாட்டு மற்றும் முழுமையான இணைப்பாக்க நிறுவனமாக தொற்றா நோய்களின் இயக்குநர் குழுமம் சேவை வழங்குகின்து.

நிகழ்ச்சித்திட்ட கட்டமைப்பு

இலங்கையில் தொற்றா நோய்களைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்குமான தேசிய மைய நிலையமாக தொற்றா நோய்களின் இயக்குநர் குழுமம்; திகழ்கிறது. தொற்றா நோய் பிரதிப் பணிப்பாளர் நாயகத்தின் (DDG/NCD) நிர்வாக விடயப்பரப்பின் கீழ் தொற்றா நோய் பணிப்பாளர் செயலாற்றுகிறார். சுகாதார சேவைகள் பிராந்திய பணிப்பாளரின் நிர்வாக விடயப்பரப்பின் கீழ், மாவட்ட மட்டத்தில் தொற்றா நோய்கள் தடுப்பு நடவடிக்கைகளுக்கான மைய நிலையமாக தொற்றா நோய்களின் மருத்து உத்தியோகத்தர் (MO-NCD) இருக்கிறார். அத்துடன் பிராந்திய சமூக மருத்துவ ஆலோசகரால் தொழில்நுட்ப வழிகாட்டல் வழங்கப்படுகிறது.

எமது வகிபாகம்

நாட்டில் தொற்றா நோய்களைத் தடுப்பதற்கும் கட்டுப்படுத்துவதற்கும் முன்னெடுப்புகளையும் தலயீடுகளையும் திட்டமிடுல், அமுலாக்குதல், கண்காணித்தல் மற்றும் மதிப்பீடு செய்தல் இயக்குநர் குழுமத்தின் பிரதான வகிபாகமாகும். இயக்குநர் குழுமம் தொற்றா நோய்களை முற்கூட்டியே கண்டுபிடிப்பதற்கும் முகாமைப்படுத்துவதற்கும் நுண்ணாய்வு, கண்காணிப்பு, மதிப்பீடு மற்றும் ஆராய்ச்சி என்பவற்றிற்கும் பரிந்துரைத்தல், கூட்டாக இருத்தல் மற்றும் தலைமைத்துவம், சுகாதார ஊக்குவிப்பு மற்றும் இடர் குறைப்பு, சுகாதார முறைமையைப் பலப்படுத்துதல் ஆகிய நான்கு பிரதான மூலோபாயங்களின் கீழ் பணியாற்றுகிறது. இந்தச் சேவைகள் தடுப்பு மற்றும் சுகப்படுத்தும் சுகாதார கவனிப்பு நிறுவகங்களின் வலையமைப்பின் ஊடாக வழங்கப்படுகின்றன. மேலும் இயக்குநர் குழுமம் சுற்றறிக்கைகள் மற்றும் வழிகாட்டல்கள் என்பவற்றைத் தயாரிப்பதில் ஈடுபடுவதோடு தொற்றா நோய்கள் பற்றிய மனித வளங்களின் திறன்விருத்தியையும் உருவாக்குகிறது.

தொற்றா நோய்கள் பணிப்பாளர் குழுமம் தேசிய காயங்கள் கொள்கையை செயற்படுத்துவதில் முழுமையான இணைப்பாக்க நிறுவனமாக செயற்படுவதோடு காயங்கள் தடுப்பு மற்றும் செயற்பாட்டு தேசிய மையமாகவும் கருதப்படுகின்றது. அத்துடன், பரிந்துரை, கூட்டாக இணைதல் மற்றும் தலைமைத்துவம், சுகாதார ஊக்குவிப்பு மற்றும் இடர் குறைப்பு, நிகழ்வுக்குப் பிந்திய கவனிப்பு மற்றும் புனர்வாழ்வு, திறன் விருத்தி மற்றும் நுண்ணாய்வு, கண்காணிப்பு, மதிப்பீடு மற்றும் ஆராய்ச்சி ஆகிய ஐந்து மூலோபாய பிரதேசங்களின் கீழ் கருதா காயங்களைத் தடுத்தல் என்ற விடயங்களை நோக்கி செயலாற்றுகின்றது.

தொற்றா நோய்கள் இயக்குநர் குழுமம் சுகாதார மற்றும் சுகாதாரம் அல்லாத துறைகளைச் சேர்ந்த பங்கீடுபாட்டாளர்களுடன் கூட்டிணைந்து காயங்கள் உள்ளிட்ட தொற்றா நோய்களைக் குறைப்பதற்கு சிறந்தமுறையில் இணைப்பாக்கம் செய்யப்பட்ட பல்-துறை அணுகுமுறையை ஸ்தாபிப்பதற்கு முன்னணி வகிபாகத்தை வகிக்கிறது.