தொற்றா நோய் இயக்குநர் குழுமத்தின் துணை அலகாக, பௌதிக நடவடிக்கையை ஊக்குவிப்பதற்கு இந்த அலகு கவனம் செலுத்துகிறது. சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்ட மூலோபாயங்கள் ஊடாக தனியார் துறை அமைப்புகள் மற்றும் அனைத்து அரசாங்க துறை அமைப்புகள் வழியாக பௌதிக நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கு ஒருங்கிணைந்த ஊக்குவிப்புக்கு முன்னுரிமையளிப்பதை பரிந்துரை செய்கிறது. இந்த அலகு உலக சுகாதார ஸ்தாபனத்துடன் கூட்டிணைந்து இலங்கையில் பௌதிக நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்கு ஒழுங்குவிதிகளையும் தரங்களையும் உருவாக்குவதற்காக தேசிய மட்ட கொள்ளளவை மேம்படுத்துவதற்கு முன்னெடுப்புகளை மேற்கொண்டுள்ளது. மேலும் இந்த அலகு சமூகத்தில் பௌதிக நடவடிக்கைகளை ஊக்குவிப்பதற்காக திறமைகளைக் கட்டியெழுப்புவதற்கும் மற்றும் வளங்களை விருத்தி செய்வதற்கும் தொழில்நுட்ப தலைமைத்துவத்தைக் கொண்டிருக்கிறது. மேலும் இலங்கை சமூகம் பௌதிக ரீதியாக மிகவும் சுறுசுறுப்புடன் இருப்பதற்கு வலுவூட்டுவதற்கு சிவில் சமூகத்தையும் தனியார் துறையையும் நகர்த்துவது சம்பந்தமான நடவடிக்கைகளை இந்த அலகு இணைப்பாக்கம் செய்கிறது.

எமது அணி

  • டாக்டர் சித்ரமாலி ரொட்றிகோ (பதிற்கடமையாற்றும் ஆலோசகர்)
  • டாக்டர் எப்.டி.என். மரிக்கார் (மருத்துவ அதிகாரி)
  • ஸ்ரீமதி மதுஷானி ஹேவாவசம் (PHMA)