இந்த அலகு புகையிலை பயன்பாட்டை நிறுத்துவது மற்றும் கட்டுப்படுத்துவது சம்பந்தப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதற்கு தொற்றா நோய் இயக்குநர் குழுமத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்டது. இந்த அலகு பின்வரும் நடவடிக்கைகளுக்குப் பொறுப்பாக இருக்கிறது.

புகையிலை தடுப்பு நிகழ்ச்சித்திட்டம்

தொற்றா நோய் தடுப்பு இயக்குநர் குழுமம் ஏனைய சுகாதார துறை மற்றும் சுகாதார துறை அல்லாத பங்காளர்களுடன் கூட்டிணைந்து பல்வேறு அமைப்புகளிலும் சமூகத்திலும் புகையிலை தடுப்பு மற்றும் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை முன்னெடுக்கிறது. புகையிலை அற்ற வலயம், புகைபிடிக்காத வலயம் என்பவற்றை ஸ்தாபித்து சமூகத்திற்கு அறிவூட்டுவதன் ஊடாக புகையிலை மதுபானத்திற்கான தேசிய அதிகாரசபை சட்டத்தை (NATA) அமுலாக்குவதற்கு சமூக ஒத்துழைப்பை நகர்த்துகிறது. மேலும் இந்த அலகு தகுந்த பணியாட் தொகுதியினருக்கு பயிற்சியளிப்பதிலும் திறமையைக் கட்டியெழுப்புவதிலும் ஈடுபடுகிறது. "ஆரம்ப சுகாதார கவனிப்பு அமைப்பில் புகையிலை பயன்பாட்டை தடுப்பதற்கும் நிறுத்துவதற்கும் சுருக்கமான தலையீடு" என்ற பயிற்சி முன்னெடுக்கப்படுகிறது.

புகையிலை பயன்பாட்டை நிறுத்தும் ஆலோசனை சேவைகள்

சுகாதார கவனிப்பு வசதிகளின் ஆரோக்கியமான வாழ்க்கைமுறை நிலையங்களில் (HLC) புகையிலை பயன்பாட்டை நிறுத்தும் சிகிச்சை நிலையங்கள் ஸ்தாபிக்கப்படும். புகையிலை அற்ற வாழ்க்கைக்காக ஏனைய சுகாதார நடவடிக்கைகளுடன் சேர்த்து சேவை பெறுபவர்கள் பதிவு செய்யப்பட்டு, மதிப்பீடு செய்யப்பட்டு சுருக்கமான தலையீடு வழங்கப்படும்.

எமது அணி

  • டாக்டர் திசாலா சாந்தி வெல்கம (சமூக மருந்துகள் பதிவாளர்)
  • ஸ்ரீமதி எச்.எச்.ஜே.மதுஷானி (PHMA)