மூலோபாய தகவல் முகாமைத்துவ (SIM) அலகு தொற்றா நோய்கள் இயக்குநர் குழுமத்தில் செயற்படுகின்ற துணை அலகாகும். இது தொற்றா நோய்கள் தகவல் முகாமைத்துவத்திற்கு கவனம் செலுத்துகிறது. நாட்டில் தொற்றா நோய்கள் காரணமாக ஏற்படுகின்ற சுமை தொடர்பாக தகவல்களையும் செயற்பாட்டை அடிப்படையாகக் கொண்ட தீர்மானங்களையும் வினைத்திறன் மிக்க தகவல் முகாமைத்துவத்தையும் மூலோபாய தகவல் முகாமைத்துவ (SIM) அலகு ஊடாகப் பகிர்ந்து கொள்ளுகிறது. மூலோபாய தகவல் முகாமைத்துவ (SIM) அலகு தொற்றா நோய்கள் பற்றிய தரவுகளை தேசிய மட்டத்திலும் துணை தேசிய மட்டத்திலும் பெற்றுக் கொள்ளுகிறது.

  • தகவல் முகாமைத்துவம்
    • சுகாதார முகாமைத்துவ தகவல் முறைமையை (HMIS) ஸ்தாபித்து பராமரிக்கிறது.
    • சுகாதார முகாமைத்துவ தகவல் முறைமையிடமிருந்து (HMIS) தகவல்களைச் சேகரித்தல், ஒப்புநோக்குதல், பகுப்பாய்வு செய்தல், பொருள்கோடல் மற்றும் பரப்புதல்.
    • e-IMMR மற்றும் பதிவாளர் நாயகத்தின் திணைக்களத்துடன் தொடர்பை ஏற்படுத்தி தரவுத்தளத்தில் இருக்கும் சனத்தொகையின் தொற்றா நோய் நோயுற்ற நிலை மற்றும் இறப்பு வீதம் என்பவற்றை ஸ்தாபித்து பேணுதல்.
    • சுகாதார முகாமைத்துவ தகவல் முறைமை (HMIS) ஊடாக அவர்களின் செயலாற்றுகை சுட்டியை விருத்தி செய்தல், முன்னேற்றதை ஒழுங்காக கண்காணித்தல் மற்றும் தேவைக்கேற்ப அணிக்கு வழிகாட்டுதல்.
    • சுகாதார முகாமைத்துவ தகவல் முறைமையின் (HMIS) தரத்தை மேற்பார்வை செய்தல்.
    • பொருத்தமான, உயர்தர தகவல் முகாமைத்துவ முறைமை மற்றும் இணையத்தளத்தை அடிப்படையாகக் கொண்ட நுண்ணாய்வு முறைமை என்பவற்றை ஸ்தாபிப்பதன் மூலம் மாகாண மற்றும் மாவட்ட சுகாதார அணி உள்ளிட்ட சுகாதார அமைச்சுக்கு உள்ளும் சுகாதார அமைச்சுக்கு வெளியிலும் உள்ள நிறுவகங்களுக்கு தொழில்நுட்ப வழிகாட்டல்களை வழங்கி இணைப்பாக்கம் செய்தல்.
    • பணியாட் தொகுதியினரின் திறமையை உயர்த்துதல்/ நுண்ணாய்வு பற்றிய பயிற்சி என்பவற்றை நடத்துதல்.
    • காலாண்டு மற்றும் வருடாந்த தொற்றா நோய் செய்திதாள்களை வெளியிடுதல். மற்றும் சுகாதார அமைச்சுக்கு அதன் வெளியீடுகளுக்காக தகவல்களை வழங்குதல் உதா: வருடாந்த சுகாதார செய்தித்தாள்.
    • தேசிய தேவை என்ற வகையில் காலத்துக்குக் காலம் ஆய்வுகளை நடத்துவதை இணைப்பாக்கம் செய்தல் உதா: தகுந்த முகவர் நிலையங்களுடன் கூட்டிணைந்து நடவடிக்கை எடுத்தல்.
  • சாட்சியங்களை அடிப்படையாகக் கொண்ட தீர்மானம் எடுப்பதற்காக தொற்றா நோய் சம்பந்தப்பட்ட ஆராய்ச்சிகளை இணைப்பாக்கம் செய்தல்.