1. தொற்றா நோய்கள் என்றால் என்ன?
தொற்றா நோய்கள், இதய நாள குழாய் அடைப்பு நோய்கள் மற்றும் இதய அழுத்தம், புற்றுநோய், நீடித்துள்ள நுரையீரல் நோய் மற்றும் நீரிழிவு நோய் உள்ளிட்ட பொதுவாக நீடித்து இருக்கின்ற அல்லது வாழ்க்கை முறையோடு தொடர்புபட்ட நோய்களாகும்.
2. மிகவும் பொதுவான தொற்றா நோய்கள் யாவை?
நான்கு பிரதான தொற்றா நோய்களாவன இதய நாள குழாய் அடைப்பு நோய்கள் (இதய அழுத்தம் மற்றும் இதய தாக்கம் போன்ற), புற்றுநோய், நீடித்த நுரையீரல் நோய் (மூச்சு தடை நோய் மற்றும் காசநோய் போன்றவை) மற்றும் நீரிழிவு.
3. தொற்றா நோய்கள் சுமை அதிகரிப்பதற்கு வழியமைக்கின்ற திருத்தக்கூடிய நடத்தை ரீதியான காரணிகள் யாவை?
தொற்றா நோய்கள் விருத்தியடையக்கூடிய வாய்ப்பை அதிகரிப்பதற்கு வழியமைக்கின்ற திருத்தக்கூடிய நடத்தை ரீதியான நான்கு பொது காரணிகள்: புகையிலை பயன்பாடு, ஆரோக்கியமற்ற சாப்பாடு, பௌதிக செயற்பாடு மற்றும் தீங்குபயக்கும் மதுபான பயன்பாடு.
4. தொற்றா நோய்கள் சுமை அதிகரிப்பதற்கு வழியமைக்கின்ற உயிரியல் காரணிகள் யாவை?
ஆரோக்கியமற்ற நடவடிக்கையின் விளைவாக ஏற்படுகிற உயர் இரத்த அழுத்தம் அல்லது மிக உயர்ந்த குருதி அழுத்தம். எடை கூடுதல் மற்றும் உடல் பருமன், இரத்தத்தில் கொழுப்பு (கொலஸ்ரோல்) அதிகரிப்பு, இரத்தத்தில் குளுகோஸ் (சீனி) அதிகரிப்பு தொற்றா நோய்களுக்கு காரணமாக எதிர்வு கூறப்படுகின்றன.
5. நாளொன்றுக்கு எவ்வளவு காய்கறிகள் மற்றும் பழங்களை நாம் உட்கொள்ள வேண்டும்?
நாளொன்றுக்கு ஐந்து பரிமாறல் காய்கறிகள் மற்றும் பழங்களை நாம் உட்கொள்ள வேண்டும் (400 கிராம் பழங்கள் மற்றும் காய்கறிகள்)
6. உப்பு / சோடியம் உட்கொள்ளுவது ஆரோக்கியமற்றதா?
ஆரோக்கியமான மட்டத்தில் உப்பு உட்கொள்ளுவது பரிந்துரைக்கப்படுகிறது. எவ்வாறாயினும், அதிகமாக உட்கொள்ளுவது ஆரோக்கியமல்ல. இது பாதகமான இரத்த அழுத்தத்தை அதிகரிப்பது சம்பந்தமாக தொடர்புபடுத்துகிறது. (இரத்த அழுத்தத்தை அதிகரிக்கிறது) அது பின்னர் இதய அழுத்தத்தை மற்றும் இதய நோயை ஏற்படுத்துகிறது.
7. எந்த உணவில் உப்பு / சோடியம் (உப்பு தனிமம்) அதிகமாக இருக்கிறது?
பொதுவாக, தயாராக உள்ள உணவுகள், பதப்பட்ட இறைச்சி, வெண்ணெய், ஊறுகாய், உப்பு சுவையுள்ள நொறுக்கு தீனிகள், உடனடி நூட்ல்ஸ் போன்ற தயாரிக்கப்பட்டுள்ள உணவுகளில் குறிப்பாக உப்பு அதிகமாக உள்ளது. சமைக்கும்போதும் உப்பு சேர்க்கப்படுகிறது. (கெட்டிக் குழம்பு மற்றும் கட்டி துண்டுகள்) அல்லது மேசையில் வைக்கப்படும் (சொய்சோஸ், மீன் சோஸ் மற்றும் மேசை உப்பு). சோடியத்திலும் சோடியம் உப்பு உள்ளடங்கியுள்ளது. அநேகமான பதப்படுத்தப்பட்ட உணவுகள் உணவுச் சேர்க்கையாக பயன்படுத்தப்படுகிறது
8. பரிந்துரைக்கப்பட்ட உப்பு உட்கொள்ளும் அளவு எவ்வளவு?
உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) பரிந்துரைக்கின்ற அளவு ஒரு வயதுவந்த நபர் நாளொன்றுக்கு 5 கிராமுக்கு குறைவாக உப்பு உட்கொள்ள வேண்டும்.
9. தனிநபர்கள் உட்கொள்ளும் உப்பு / உப்பு தனிமத்தின் (சோடியம்) அளவைக் குறைப்பது எப்படி?
தனிநபர் பின்வருமாறு உப்பு / உப்பு தனிமத்தின் (சோடியம்) உட்கொள்ளுவதைக் குறைக்க முடியும்:
- உணவு தயாரிக்கும்போது உப்பு சேர்க்க வேண்டாம்.
- உப்புக்கு பதிலாக மூலிகைகளையும் சுவையூட்டும் பொருட்களையும் சேர்க்கவும்.
- மேசையில் உப்பு போத்லை வைக்க வேண்டாம்.
- உப்பு கலந்த நொறுக்கு தீனிகளை மட்டுப்படுத்தவும்.
- உப்பு குறைந்த உற்பத்திகளைத் தெரிவு செய்யவும்.
10. சீனி உட்கொள்ளுவது ஆரோக்கியமற்றதா?
அதிக சீனி உட்கொள்ளுதல் உடல் எடை கூடுவதற்கும் உடல் பருமனுக்கும் பற் சொத்தை மற்றும் நீரிழிவுக்கும் பிரதான காரணியாக அமைகிறது. சீனியற்ற உணவு மொத்த சக்தியை அதிகரிக்கிறது மற்றும் சீனி அடங்கிய உணவை உட்கொள்ளுதல் போதியளவு கலோரியைக் கொண்டிருக்கும் உணவை உட்கொள்ள இடமளிப்பதில்லை. அதனால் எடை அதிகரிப்பதோடு தொற்றா நோய் ஏற்படுவதற்கும் இடமளிக்கிறது.
{slide 11. எந்த உணவில் அதிக சீனி இருக்கிறது?}
உயர் மட்ட சீனி இனிப்பூட்டப்பட்ட பான வகைகள், இனிப்பான நொறுக்குத் தீனிகள் மற்றும் இனிப்பு பண்டங்கள் என்பவற்றில் அதிகமாக இருக்கின்றன.
12. உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) பரிந்துரைக்கின்ற சீனி உட்கொள்ளும் அளவு எவ்வளவு?
நாளொன்றுக்கு ஆறு தேக்கரண்டி சீனி.
13. உடல் ரீதியான செயற்பாடு என்றால் என்ன?
சக்தி வெளியிடலுக்குத் தேவைப்படுகின்ற எலும்புக்கூட்டு தசைநார்களால் உற்பத்தி செய்யப்படுகின்ற ஏதேனும் உடல் அசைவு உடல் ரீதியான செயற்பாடு என வரைவிலக்கணப்படுத்தப்பட்டுள்ளது. உடல் ரீதியான செயற்பாட்டில் உடற் பயிற்சியுடன் ஏனைய உடல் அசைவுடன் சம்பந்தப்பட்ட உடல் ரீதியான அசைவு மற்றும் விளையாட்டின் ஒரு பகுதியாக, வேலை, செயலூக்கமுள்ள போக்குவரத்து மற்றும் வீட்டு வேலைகள் மற்றும் ஓய்வுநேர பொழுதுபோக்கு செயற்பாடுகள் போன்றவையாகும்.
14. உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) பரிந்துரைக்கின்ற உடல் ரீதியான செயற்பாடுகளின் மட்டம் என்ன?
வயதுவந்தோர் குறைந்த பட்சம் 150 நிமிடங்கள் காற்றோட்டமுள்ள இடத்தில் மிதமான உடற் பயிற்சியை வாரம் முழுவதும் அல்லது 75 நிமிடங்கள் பலமான உடற்பயிற்சியை வாரம் முழுவதும் மேற்கொள்ள வேண்டும் அல்லது பலமான மற்றும் மிதமான என்ற இரண்டையும் சேர்த்து வாரம் முழுவதும் அல்லது அதற்கு சமமாக உடற்பயிற்சி செய்ய வேண்டும். சிறுவர்களும் வாலிப வசதினரும் குறைந்பட்சம் 60 நிமிடங்கள் மிதமான அல்லது பலமான உடற்பயிற்சியை தினமும் செய்ய வேண்டும். இதில் விளையாட்டு, போக்குவரத்து, வேலைகள், பொழுதுபோக்கு அம்சங்கள், உடற் கல்வி அல்லது திட்டமிட்ட உடற்பயிற்சி என்பவற்றை குடும்ப அமைப்பு, பாடசாலை மற்றும் சமூக நடவடிக்கை என்ற வகையில் செய்ய முடியும்.
15. தினசரி உடற்பயிற்சி செய்வதன்மூலம் கிட்டும் நன்மைகள் யாவை?
உடல் ரீதியாக சுறுசுறுப்பாக இருப்பது வாழ்க்கை முழுவதும் நல்ல சுகாதரத்திற்கு அத்தியாவசியமானதாகும். ஒழுங்கான போதுமான மட்டத்தில் உடற் பயிற்சி:
- இதய அழுத்தம், இதய நோய், இதய தாக்கம், நீரிழிவு, மார்பக மற்றும் குடல் புற்றுநோய், மன அழுத்தம் கீழே விழும் அபாயம் என்பவற்றைக் குறைக்கிறது.
- எலும்பு மற்றும் செயற்படும் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
- சக்தி சமநிலை மற்றும் எடை கட்டுப்பாடு என்பவற்றிற்கு அடிப்படையாக இருக்கிறது.
16. உடல் திரள் சுட்டி (BMI) என்றால் என்ன?
BMI என்பது உங்களுடைய உடல் எடையை கிலோ கிராமிலும் (முப) உங்களுடைய உயரத்தை மீட்டரிலும் பிரிக்கும்போது கிடைக்கின்ற பெறுமதியாகும்.
BMI= Weight (Kg)
Height2 (m)
17. உங்களுக்குப் பொருத்தமான BMI என்ன?
உங்களுடைய BMI 18.5 - 25க்கு இடையில் இருப்பது மிகவும் சிறந்தது.
18. புகையிலை பயன்பாடு சுகதாரத்திற்கு எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்துகிறது?
புகையிலை பயன்பாடு சுகதாரத்திற்கு மரண தாக்கத்தை ஏற்படுத்துகிறது. புகைபிடிக்கும்போது குறைந்தபட்சம் 69 புற்றுநோயை ஏற்படுத்தும் இரசாயன காரணி கலந்துள்ளதுடன், நூற்றுக் கணக்கான மனித நச்சுத்தன்மை அடையாளம் காணப்பட்டுள்ளது. புகையிலை பயன்பாடு புற்றுநோய், நுரையீரல் நோய் மற்றும் இதய நோய் உள்ளிட்ட பல நீடித்த நோய்களுக்கு பிரதான இடர் காரணியாக இருக்கின்றது.
19. ஈடுபாடற்ற அல்லது இரண்டாம் நிலை புகைப்பிடித்தல் என்றால் என்ன?
ஈடுபாடற்ற அல்லது இரண்டாம் நிலை புகைப்பிடித்தல் என்றால் புகைப்பிடிப்பவர் விடுகின்ற புகையை சிகரட்டின் அல்லது சுருட்டின் அடிக்கட்டையிலிருந்து வெளியாகும் புகையை இன்னுமொருவர் சுவாசிப்பதாகும்.
20. ஈடுபாடற்ற அல்லது இரண்டாம் நிலை புகைப்பிடித்தல் தீங்குபயக்கக் கூடியதா?
ஆம், அது நுரையீரல் புற்றுநோயை அல்லது அகால மரணத்தை அதிகரிக்கும்.
21. ஆரோக்கியமான வாழ்க்கைமுறை நிலையம் (HLC) என்றால் என்ன?
ஆரோக்கியமான வாழ்க்கைமுறை நிலையம் (HLC) சுகாதார கவனிப்பு நிறுவகங்களில் (வைத்தியசாலைகள், சுகாதார மருத்துவ உத்தியோகத்தர் அலுவலகம்) அமைக்கப்பட்டுள்ள சுகாதார நிலையமாகும். இது 35 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு சுகாதார வழிகாட்டல்களையும் காட்சித் திரை (Screening) வசதிகளையும் வழங்குகிறது. நீங்கள் பரிந்துரையின்றி ஆரோக்கியமான வாழ்க்கைமுறை நிலையத்தில் (HLC) காட்சித் திரை வசதியைப் (Screening) பெற்றுக் கொள்ள முடியும்.
22. ஆரோக்கியமான வாழ்க்கைமுறை நிலையத்தினால் வழங்கப்படுகின்ற (HLC) சேவைகள் யாவை?
நீரிழிவு, இரத்த அழுத்தம், கொலஸ்ட்ரோல், மற்றும் உடல் திரள் சுட்டி (BMI) இதய இரத்த நாளம் சார்ந்த நோய், புற்றுநோய் திரைக்காட்சி (Screening) (மார்பக புற்றுநோய், கேடயச் சுரப்பி வீக்கம், வாய் புற்று) மற்றும் மூச்சுக் குழல் அழட்சி நோய் என்பவற்றிற்கு ஸ்கிரீன் செய்யப்படும். சுகாதார பணியாளர்கள் எடை குறைப்பு, உடல் ரீதியான செயற்பாடுகள் மற்றும் ஏனைய சுகாதாரம் சம்பந்தப்பட்ட தலைப்புகளில் உங்களுக்கு அறிவூட்டுவார்கள்.