தொற்றா நோய் இயக்குநர் குழுமம் சுகாதார அமைச்சின் காயம் தடுப்பு தேசிய மையமாகக் கருதப்படுகின்றது. அது கருதா காயங்களைத் தடுப்பது பற்றி முக்கியமாகக் கவனம் செலுத்துகிறது. இந்த காயம் தடுப்பு நிகழ்ச்சித்திட்டம் தற்பொழுது ஆலோசனை வழங்கும் சமூக மருத்துவர் ஒருவரின் தொழில்நுட்ப வழிகாட்டலின் கீழ் நடத்தப்படுகின்றது.

இந்த முழு நிகழ்ச்சித்திட்டமும் இலங்கையில் காயம் தடுப்பு மற்றும் முகாமைத்துவ மூலோபாய சட்டகம் மற்றும் தேசிய கொள்கை என்பவற்றில் அடையாளம் காணப்பட்ட 4 விரிவான மூலோபாய விடயங்களின் கீழ் 2016ஆம் ஆண்டு நடத்தப்பட்டது. அவையாவன பரிந்துரை, கூட்டு பங்காளர் மற்றும் தலைமைத்துவம், சுகாதார மேம்பாடு மற்றும் இடர் குறைப்பு, நிகழ்வுக்குப் பிந்திய கவனிப்பு மற்றும் தேசிய காய நுண்ணாய்வு என்பவையாகும்.

பரிந்துரை, கூட்டு பங்காளர் மற்றும் தலைமைத்துவம்

சுகாதார ஊக்குவிப்பும் இடர் குறைப்பும்

இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், தேசிய காயம் நுண்ணாய்வு முறைமையால் அடையாளம் காணப்பட்ட வடுபடக்கூடிய குழுக்கள் மற்றும் நிகழ்வு இடம்பெற்ற இடம், காயத்தின் பொறிமுறை என்பவற்றில் தங்கி பல நிகழ்ச்சித்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அந்த நிகழ்ச்சித்திட்டங்களில் சில கீழே தரப்பட்டுள்ளன:

  • வீதிப் பாதுகாப்பு
  • நீர் பாதுகாப்பு
  • வீட்டுப் பாதுகாப்பு
  • சிறுவர் மற்றும் மூத்தோர் பாதுகாப்பு
  • வேலை செய்யும் இடங்களில் பாதுகாப்பு

நிகழ்வுக்குப் பிந்திய கவனிப்பு

தொற்றா நோய் அலகு இந்த நிகழ்ச்சித்திட்டத்தை 2016ஆம் ஆண்டு ஆரம்பித்தது. இந்த நிகழ்ச்சித்திட்டம் முதலுதவி துறையில் உள்ள நிபுணர்களின் உதவியுடன் நடத்தப்பட்டது. இதன் நோக்கம் குறைந்தபட்சம் வீட்டுக்கு 1 நபருக்காவது அடிப்படை முதலுதவி பயிற்சி அளிப்பதாகும். பயிற்சி நிகழ்ச்சித்திட்டத்தை பல்வேறு குழுக்களுக்கு மாவட்ட மற்றும் சுகாதார மருத்துவ உத்தியோகத்தர் மட்டத்தில் நடத்துகின்ற அதேவேளையில் அடிப்படை முதலுதவி பயிற்சி கொள்ளளவை மாவட்ட மற்றும் சுகாதார மருத்துவ உத்தியோகத்தர் மட்டத்தில் பலப்படுத்துவது தொற்றா நோய் அலகினால் தற்பொழுது பிரதான விடயமாக அடையாளம் காணப்பட்டுள்ளது.

காய நுண்ணாய்வு

தேசிய காய நுண்ணாய்வு 2016ஆம் ஆண்டு நுண்ணாய்வு காவல் அமைவிடமாக அமைக்கப்பட்டது. இது வெளி நோயாளர் நுண்ணாய்வு, உள் நோயாளி நுண்ணாய்வு, மரண நுண்ணாய்வு மற்றும் இடம் மாற்றுகின்ற நுண்ணாய்வு என்ற நான்கு ஆக்கக் கூறுகளைக் கொண்டுள்ளது.

எமது அணி

  • டாக்டர் சமிதா சிறிதுங்க ஆலோசனை வழங்கும் சமூக மருத்துவர், காய தடுப்பு நிகழ்ச்சித்திட்டம் பற்றிய தேசிய நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர்
  • டாக்டர் சித்ராங்கனி பெரேரா சமூக மருத்துவ சிரேஷ்ட பதிவாளர்
  • திரு. நிசாந்த பிரதீப் குமார அபிவிருத்தி உத்தியோகத்தர்