திட்டமிடல் மற்றும் திறமையைக் கட்டியெழுப்பும் அலகு ஆலோசனை வழங்கும் சமூக மருத்துவர் ஒருவரால் வழிநடத்தப்படுகின்றது. இது. தொற்றா நோய்களின் வருடாந்த மற்றும் மத்தியகால செயற் திட்டத்தின் அபிவிருத்தியில் ஈடுபடுகிறது. அத்துடன், நன்கொடை நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரிடமிருந்து கிடைக்கும் நிதியங்களைப் பயனுறுதி மிக்க வகையில் பயன்படுத்தும் பொருட்டு செயற்பாடுகளுக்கு முன்னுரிமையளிக்கப்படுகின்றது. இந்த அலகு அடையாளம் கண்டவற்றிற்கு தொழில்நுட்ப வழிகாட்டல்களை வழங்கி மாவட்டங்கள் அவர்களுடைய பல்துறை மத்தியகால அறிக்கையைத் தயாரிப்பதற்கு அவர்களுக்கு வழிகாட்டுகிறது. அதன் பணிப்பாணையில் இருக்கும் வகையில் மாவட்ட மட்டத்தில் அமுல்படுத்தப்படுகின்ற செயற்பாடுகளின் முன்னேற்றதைக் கண்காணிக்கின்றது. தொற்றா நோய்கள் இயக்குநர் குழுமத்தின் முன்னேற்றம், கணிகாணிப்பு மதிப்பீடு என்பவற்றை சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கும் நிதி வழங்கும் முகவர் நிலையங்களுக்கு வழங்குவதும் திட்டமிடல் அலகின் பொறுப்பாகும்.

தேசிய மட்ட இணைப்பாக்க பொறிமுறை ஊடாக தொற்றா நோய்கள் கொள்கை வழிகாட்டல்களும் மூலோபாய திட்டங்களும் சம்பந்தப்பட்ட அனைத்து பங்கீடுபாட்டாளர்களுடன் அமுலாக்கப்பட்டு அடைந்துள்ளதை கண்காணித்தல். தேசிய தொற்றா நோய்கள் பேரவை, தேசிய நிலைக்குழு மற்றும் தொற்றா நோய்க்கான பரிந்துரை சபை என்பவற்றை சம்பந்தப்பட்ட அரசியல், பல்துறை மற்றும் சுகாதார அமைச்சு அதிகாரிகள் ஆகியோருடன் நடத்துதல், திட்டமிடல் என்பவை அலகின் வகிபாகமாகும்.

ஒழுங்கான கால இடைவெளியில் தொற்றா நோய்கள் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு மற்றும் தேசிய பல்துறை செயற் திட்டம் என்பவற்றிற்கான தேசிய கொள்கையையும் மூலோபாய சட்டகத்தையும் மதிப்பீடு செய்தல் மற்றும் மீளாய்வு செய்தல் என்பற்றில் திட்டமிடல் அலகு செயலூக்கத்துடன் ஈடுபடுகிறது. மேலும் இந்த அலகு மனித வளங்கள் அபிவிருத்திக்குப் பொறுப்பாக இருப்பது மாத்திரமல்ல பணியாட் தொகுதியினரின் இயல்பு நிலையயும் பணியாட் தொகுதி செயற்பாடுகளையும் மீளாய்வு செய்வதற்கும் பொறுப்பாக இருக்கிறது. சுகாதார கவனிப்பு பணியாளர்களுக்கும் பயிற்றுனர்களுக்கும் பயிற்சி பாடத்திட்டத்தில் உள்ள சேவைக்கால பயிற்சியை அபிவிருத்தி ஊடாக வழங்குவதற்கும் தேவை அடிப்படையில் பயிற்சி நிகழ்ச்சித்திட்டங்களை ஒழுங்கு செய்வதற்கும் பொறுப்பாக இருக்கிறது.

அதன் பணிப்பாணையில் இருக்கின்ற வகையில் தொழில்நுட்ப வழிகாட்டல் ஊடாக தொற்றா நோய்கள் தடும்பு கட்டுப்பாட்டுக்கான மாவட்ட மட்ட திட்டமிடல் நடவடிக்கைமுறைகளைப் பலப்படுத்துதல்.

எமது அணி

  • டாக்டர் அருந்திக செனரத்ன ஆலோசனை சமூக மருத்துவர்
  • டாக்டர் லக்ஷிமா நிலவீர மருத்துவ அதிகாரி
  • திரு. இந்திக பத்தேவல அபிவிருத்தி உத்தியோகத்தர்